Wednesday, October 14, 2009

’உங்கள் ஓட்டு அருமை அண்ணன் பிடல் காஸ்ட்ரோவுக்கே...’

மாண்புமிகு வாக்களிக்கும் இயந்திரங்களுக்கு வணக்கம்!
நம்ம ‘ஜனநாயகத்துல’ ரெண்டு இயந்திரங்கள் இருக்கு.

ஒண்ணு, வாக்குப் பதிவு செய்யறது. அடுத்தது, வாக்குப் போடறது!
மொத எந்திரத்துக்கு, கரண்ட்டு வேணும்.

ரெண்டாவது எந்திரத்துக்கு...கரன்சி, சாராயம், பிரியாணி, பொம்பளைங்க, பலான படம்...இன்னும் தினுசு தினுசா வேணும்.
இதையெல்லாம் குடுத்தாத்தான் இந்த இயந்திரம் வேலை செய்யும்.

ஆனா...இப்ப நான் பேசப் போறது இந்த எந்திரங்களைப் பத்தி இல்ல...!

தெனாலிராமன்....ஒரு குதிரை வளர்த்தான். அந்தக் குதிரைக்கு தினமும் ஒரே ஒரு புல்லை ஓட்டை வழியா காட்டினான். ஒரு முறை மந்திரி அந்த ஓட்டை வழியா...மூஞ்சை நீட்டிப் பார்த்தான். குதிரை புல்லுன்னு நினைச்சு...தாடிய கடிச்சு வச்சிடுச்சு.

வாக்குப் போடற எந்திரங்கள்லாம்...தெனாலிராமன் குதிரை மாதிரிதான்.
அதனால...பாவம்.... அதுகளை விட்டுருவோம்!

ஒலக அரசியலைக் கரைச்சி குடிச்ச...

வர்க்கப் பார்வைக்கும் இனப் பார்வைக்குமான ஆறு வித்தியாசங்களை அரை நொடியில கண்டு புடிக்கிற தெறமை உள்ள...

”புலிகள் இல்லன்னா அந்த நாட்டுல தமிழனுங்க தண்ணி கூட குடிக்க முடியாது ஐயா...”

”இந்திய அரசாங்கம் மட்டும் சிங்களனுக்கு உதவி செய்யலைன்னா நம்ம தம்பி எப்பவோ நாடு அமைச்சிருப்பாரு...நானும் பொண்டாட்டி புள்ளைகளோட டூர் அடிச்சிட்டு வந்திருப்பேன்....”

‘சார்...இங்க எந்தக் கட்சியையுமே நம்ப முடியாது சார்...எல்லாருமே கரப்ட்டு...இவங்களைப் பொறுத்த வரைக்கும்...ஈழப் பிரச்சினை ஒரு எலக்க்ஷன் மேட்டர்...ஓட்டு வாங்கற வரைக்கும் பேசுவாங்க...அப்பொறம் மறந்துடுவாங்க...’
-இப்படியெல்லாம் ’வெவரமாக’ப் பேசும் இன உணர்வாளர்களே...உங்களுக்குத்தான் இந்தக் கடுதாசி!

தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சினை இருக்கு.
‘எவ்ளோ...அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க...’ன்னு நாம ‘பெருந்தன்மையாத்தான்’ விட்டோம். ஆனா...இந்த சிங்களப் பன்னிங்க நம்மள இளிச்சவாயனுகன்னு ‘தப்பா’ நினைச்சுக்கிட்டு...மீன் புடிக்கப் போனா சுட்டுக் கொல்லுதுங்க.

’தம்பி...நாங்க அடி வாங்காத ஊரே கிடையாது...
கர்நாடகாக் காட்டுக்குள்ள...1 லட்சம் பேராச் சேர்ந்து அகதியா தமிழ்நாட்டுக்கு வந்தவய்ங்க...என்னமோ...400 பேரைக் கொன்னுட்டு பீத்திக்கிற...?’-ன்னு கேட்டு சிங்களனையே பேச்சு சாதுர்யத்தால மடக்கிப்புட்டோம்!

அதனால...நம்ம ஊர்ல நாம பிரிச்சு மேயற பெருமைங்களை எல்லாம் விடுங்க.

தமிழீழத்துல கடந்த ரெண்டு வருசமா...கொஞ்சம் கொஞ்சமா நம்ம மக்களைக் கூறு போட்டு கொன்னுக்கிட்டிருந்தானே...அப்ப அங்கேருந்து நாமல்லாம் மனசுக்குள்ள் கோயில் கட்டிக் கும்பிடற இயக்கம் நம்ம கிட்ட ‘ஏதாவது செய்யுங்க...எங்க மக்களைக் காப்பத்துங்க...’ன்னு கதறினிச்சே...!

அதுக்கு என்ன செஞ்சோம்?

வீடு எரியுதுன்னு கத்தினவங்ககிட்ட ’எருமை மாட்டை அனுப்பறேன்...அது மூத்திரம் பேய்ஞ்சு நெருப்பை அணைச்சுடும்’னு சொன்னானாம் ஒருத்தன்.

அது மாதிரி...அக்கரையிலேருந்து ‘எமக்காகவும் பேசுங்களேன்’னு கதறினப்ப...நாம எல்லாரும்,

’தேர்தல் மட்டும் முடியட்டும்...அப்புறம் வச்சுக்கிறோம் கச்சேரி...அது வரிக்கும் போற உசிரு போகட்டும்...கவலப் படாதீங்க...’ன்னு பதில் சொன்னோமே...நினைப்பு இருக்கா...?
அதோடயா நிறுத்தினோம்?

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி இன விரோதமானது.
அ.தி.மு.க – பா.ம.க – ம.தி.மு.க கூட்டணிதான் இனத்தைக் காக்கும்...னு சொல்லி ’எறங்கி’ வேலை செஞ்சோமே...!

நான் தெரியாமத்தான் கேக்கறேன்...

பக்கத்துல ஒரு இனம் அழியும்போது...இங்க என்ன மசிறுக்குடா தேர்தல்...?
மொதல்ல அங்க போரை நிறுத்து...
அப்புறம் இங்க தேர்தல் நடத்து...!

-இப்படி சொல்லற நேர்மையும் தில்லும் இங்க உள்ள ஒரு ஓட்டுப் பொறுக்கிக்கும் ஏன் வரலை?

அட...அதுகதான் பொறுக்கிகன்னு தெரியுதுல்ல...?
நாமெல்லாம்...உலக அரசியல் தெரிஞ்சவங்களாச்சே... நமக்கு புத்தி எங்க போச்சு?
கந்தனுக்கு புத்தி கவட்டைக்குள்ளம்பாங்க...நம்மள மாதிரி ’இன உணர்வாளர்களுக்கு’ புத்தி...
வாக்குப் பெட்டிக்குள்ள...!

தேர்தல் என்ன அம்புட்டு முக்கியமா? அட...இந்தத் தேர்தல் எந்த நாட்டுக்குப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க...? நமக்குத்தான் நாடே இல்லையே...!
என் இனத்தை அழிக்காதேன்னு ஒரு கூட்டம் பேசினா கூட புடிச்சு உள்ள வைப்பான். அப்புடீன்னா...இது எவன் நாடு? சத்தியமா நம்ம நாடு இல்ல!

அப்படிப்பட்ட...அடிமைங்க நமக்குத் தேர்தல் எதுக்கு?
அதுவும்...அங்க நம்ம இனம் கொத்துக் கொத்தா செத்து விழும்போது...எதுக்குத் தேர்தல்?

ஆட்சி மாறினா...அதாவது பாஜக வந்தா...ஈழம் கிடைச்சிடுமா?
இல்ல...போரை நிறுத்திடுவானா?

அப்புடி நீங்க நம்பினா...குளோபல் வர்மிங் அதிகமாகி இந்தியா பூரா கடலுக்குள்ள போற வரைக்கும் உங்களுக்கு நாடு கிடைக்காது.
ஈழத்தை எதிர்ப்பது-ங்கறது இந்திய அரசோட கொள்கை. காங்கிரசோட கொள்கை இல்ல. கட்சி மாறினாலும் ஆட்சி மாறினாலும்...அரசோட கொள்கை மாறாது.

பாஜகதான் மதவாத கட்சி...அதனால காங்கிரஸ்தான் ஜெய்க்கணும்னு இஸ்லாமியருங்க பேசுறதக் கேக்கும்போது சிப்பு சிப்பா வரும்.

அட...ங்கொக்க மக்கா....பாபர் மசூதிய இடிச்சப்ப அதைத் தடுக்காம...இடிக்கற இந்துத்துவா வெறி நாய்ங்களுக்கு பிஸ்கட் போட்டு பாதுகாப்பு கொடுத்தது...காங்கிரஸ் கட்சி பிரதமர் நரசிம்ம ராவ்தானே...?
-ன்னு பாய்ங்ககிட்ட சொல்லுவேன்.

’அப்ப...யாரைத் தான் ஆதரிக்கிறது பாய்...?’ன்னு எதிர்க் கேள்வி கேப்பாங்க.

நமக்கெல்லாம் இதுதான் பிரச்சினை.
யாரையாச்சும் ’ஆதரிச்சே’ ஆகணும்!

திருடன்
மொள்ள மாரி
தெள்ளவாரி
முடிச்சவிக்கி
பொம்பளப் பொறுக்கி
-இதுல யாரையாவது ‘ஆதரிக்கணும்னா’. உப்பு போட்டு சோறு திங்கறவன்...சூடு சொரணை உள்ளவன்...மூக்கு மேல கோவம் வந்து
‘நான் என்னா...ம...க்குடா இதுல எவனையாச்சும் ஆதரிக்கணும்?’ னு கேப்பான்.

ஆனா...நமக்குத்தான் அதெல்லாம் கிடையாதே...! அதனால, ’சார்...இந்த எலக்சன்ல மொள்ளமாரிக் கூட்டணிக்கே ஓட்டுப் போடலாம் சார்... லாஸ்ட் டைம் தெள்ளவாரிங்களுக்குப் போட்டு சரியா பர்ஃபாம் பண்ணல்லை’ன்னு ரொம்ப புத்திசாலித்தனமா முடிவு எடுப்போம்.

ஆக...காங்கிரசும் பாஜவும் வேற வேறன்னு நினைச்சா...பாவம் உங்களுக்கு அரசியல் புரியலன்னு அர்த்தம்! பாஜக ஆட்சியிலதானே...பொடா சட்டம் வந்துச்சு?

நம்ம புரட்சிப் புயலு...கூட ’தீவிரவாதத்தை எதிர்க்கோணும்னா பொடா மாதிரி ஒரு புனித சட்டம் தேவை...’ன்னு கர்ஜனை பண்ணிக் கை தூக்கினாரே...!

தமிழ்நாட்டுல அந்தச் சட்டம் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேலதான் பாய்ஞ்சுது...! அதுல நம்ம புயலும் சிக்கி சின்னாபின்னமானது ஒரு காமெடி கதை!

இது சின்ன கொசுறுதான். நீங்கள்லாம் நிறைய படிச்சவங்க...நிறைய உதாரணம் தேவையில்ல.

’என் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்தென்றால்...தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்’னு சொன்னிச்சு...புரட்சிப் புயல்.

அந்தத் தலைவனுக்கு உண்மையிலேயே ஆபத்து வந்திச்சே...மே 17 ஆம் தேதி...
புயல் என்னா செஞ்சிக்கிடிருந்திச்சி...?
ஓட்டு எண்ணிக்கையில இருந்திச்சு!

சரி...நம்ம தமிழ்க் குடிதாங்கி மருத்துவர்...இனமானப் போராளி...என்ன செஞ்சாரு?
மகன் மத்திய மந்திரியா இருந்து அடிச்ச கோடிகளை எங்கே பதுக்கறதுன்னு ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டிருந்தாரு.

இந்த லெப்டு ரைட்டுங்கள்லாம்...?
’தோழர்...தேர்தல் என்பது ஜனநாயகப் புரட்சியோட முதல் படிநிலை...ஆனா...சிறீலங்காவுல நடக்கறது ஒரு அவசர இனவாத கலகம்...’இப்புடீல்லாம் உளறிக் கொட்டிக்கிட்டு இருந்துச்சுகளோ!

நம்ம இனமானப் போராளி தமிழ்நாட்டு பிரபாகரன்(சத்தியமா...இப்புடித்தான் போட்டுக்குறாரு) திருமா...வழக்கம் போல விளம்பரப் பதாகைகள்ல போடறதுக்கு ஃபோட்டொவுக்கு போஸ் குடுத்துக்கிட்டிருந்தாரா...?

ஒருத்தன் கூட அன்னிக்கு...(மே 17) ரோட்டுக்கு வரலையேடா!
பாவிகளா...!

இத மட்டும் செஞ்சிருந்தா...அன்னிக்கு செத்த 25 ஆயிரம் பேர்ல ஒரே ஒரு உசிரையாச்சும் காப்பாத்தியிருக்கலாமே...!
செய்யலையே...

ஒங்களையெல்லாம் எங்க தலைவன் நம்பினானே...
ஒங்களையெல்லாம் நாட்டுக்குக் கூட்டிட்டுப் போய்...அரசியல் பாடம் நடத்தி...இனம்னா என்னா...போராட்டம்னா என்னா...னு சொல்லிக் குடுத்து அனுப்புனாங்களே...
நமக்குக் கக்ஷ்டம் வரும்போது இதுகள்லாம் எரிமைலயா வெடிக்கும்னு நம்பித்தானே...அந்தத் தலைவனும் அந்த இயக்கமும் அந்த மக்களும் அங்கே களத்துல நின்னாங்க...?

அயோக்கியர்களா...கழுத்த அறுத்துப்புட்டீங்களே...!

மனசாட்சின்னு ஒண்ணு ஒங்களுக்கு இல்லன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் கேக்கறேன்.

நடேசன் ஐயாவையும் மத்த அரசியல் தலைவருங்களையும் சமாதானம்னு சொல்லி சுட்டுக் கொன்னானுங்களே...

அந்த சேதி வந்த மறு நிமிசமே...

சென்னையில இருக்கிற இலங்கை தூதரகத்தை நோக்கி ஒரே ஒருத்தன் கூட போகலியே...
இந்தியாவோட சம்மதத்தின் பேர்லதான் நடேசன் ஐயாவும் மத்தவங்களும் போனாங்க...இது உங்க எல்லாருக்கும் தெரியும்.

அவங்க கொல்லப்படறதுக்கு மொதல் நாள்...அதே நடேசன் ஐயா...ஒங்க எல்லாத்துக்கும் பேசி...’ஏதாச்சும் செய்யுங்க’ன்னு கதறினாரே...!
நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்கன்னு தெரிஞ்ச பிறகுதானே...அவரும் மத்த தளபதிங்களும் சாவை எதிர்பார்த்தே போய்ச் சேர்ந்தாங்க!

தன் மக்கள் சாகறதைத் தடுக்கறதுக்காக...தாங்கள் செத்தாலும் பரவாயில்லன்னு போற அவங்க எங்க...?

’ஹி...ஹி...ரெண்டு சீட்டு போட்டுக் குடுத்தா...நம்ம அணியிலயே இருந்துடலாம்’னு தலையச் சொறியிற நீங்க எங்க...?

உங்க கூடல்லாம் நின்னு எங்க தலைவர் போட்டோ எடுத்தாரே...எனக்குத் தெரிஞ்சி அந்த மனுசன் வாழ்க்கையில படிஞ்ச ஒரே கறை அதுவாத்தான் இருக்கும்.

ஆனா...நீங்க புத்திசாலிங்க...அந்தப் படத்தை இங்க வந்து போட்டு பிலிம் காட்டி...அரசியல் ’பண்ணி’ பதவியும் வாங்கிட்டீங்க.

’நடேசன் மற்றும் தளபதிகளின் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்குன்னு...ஒரே ஒரு இந்திய அரசு அலுவலகத்தைக் கூட நீங்க நெருங்கலையே...’

பின்ன என்ன மயித்துக்கு...நீங்கள்லாம்...அந்த தலைவன்கிட்ட நம்பிக்கைய வளர்த்தீங்க?

-இப்படி இந்தக் கழிசடைகளைக் கேள்வி கேக்க வேண்டிய நாம எல்லாம்...இந்தப் பொறுக்கிங்களுக்கு மாத்தி மாத்தி ஓட்டுப் போடறோமே...

ஏன்...?

இதுகளுக்கு இனமும் கிடையாது மொழியும் கிடையாது...!
இருக்கறது ஒண்ணே ஒண்ணு...பதவி வெறி!
அதுக்காக...
தொண்டை கிழியக் கத்தி கைத்தட்டல் வாங்கி...
‘அங்கே...ஈழத்தில் என் தம்பியின் படைகள் சிங்களக் காடையரைப் பின்னங்கால் பிடறியில் பட ஓட வைக்கின்றன’
-ன்னு புலிகளோட வீரத்துல இதுக வயிறு வளர்த்துப் பொழைப்பு நடத்தறதுக!

தேர்தல்ல நிக்கிற எந்தக் கட்சியும் எந்தத் தலைவனும் இதே மாதிரி...
தத்தாரிதான்...! மொள்ளமாரிதான்...! முடிச்சவிக்கிதான்!
தனித் தனியா சொல்ல வேண்டியதில்ல.

இப்பவும் முள்வேலிக்குள்ள இருக்கற மூணு லட்சம் மக்களைக் காப்பாத்த இந்த தேர்தல் பொறுக்கிகள் என்ன செஞ்சுக்கிட்டிருக்கு...?

சும்மா ஒரு ஆர்ப்பாட்டம்...
கூட்டம்...
மாநாடு...
இல்லன்னா இருக்கவே இருக்கு...அறிக்கை!

இது கூட எதுக்குத் தெரியுமா...?
எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாருங்கற மாதிரி...
‘நாங்களும் கச்சி நடத்தறோம்...’னு காட்டிக்கிறதுக்குத்தான்.

ஒரு லட்சம் பேரைக் கொன்னிருக்கான்.
ஒரு இயக்கத்தையே அழிச்சிட்டோம்கறான்.
தலைவரையே கொன்னுட்டோம்கறான்.
மூணு லட்சம் மக்களை ஆடு மாட்டைவிட மோசமா அடைச்சி வச்சிருக்கான்.

இந்நேரம் தமிழ்நாடு எப்புடி இருக்கணும்?

வீதிக்கு வீதி போராட்டம் நடக்க வேணாமா?

ஏன் நடக்கலை?

நாம தேர்தல்ல மட்டுமே புரட்சி செய்யக் கத்துக்கிட்டவங்க.

நம்ம தளபதிகளும் தானைத் தலைவர்களும் மேடையில மட்டுமே புரட்சி நடத்தற வெவரமானதுக...

ஒண்ணு சொல்றேன்...

மொதல்ல இந்த ஓட்டுப் போடற பழக்கத்தை நிறுத்துங்க.

நம்மளச் சுத்தி இருக்கிற எல்லா தேர்தல் அரசியல்வாதிங்களுமே...மொள்ளமாரிங்கதான்.

ஏன்னா...தேர்தல்ங்கறதே...பணம் சுருட்டறதுக்கான ‘ஏற்பாடு’தான்.

234 எம் எல் ஏங்களும்...40 எம் பிங்களும் சேர்ந்து ‘தனி ஈழத்தை ஆதரிப்போம்’னு கொரல் கொடுத்தா கூட டில்லிக்காரன் ’ஐயோ...எனக்கு பயமா இருக்குப்பா...’ன்னு பம்மிகிட்டு தனி ஈழம் அமைக்க ஒதவி செய்ய மாட்டான்.

மொதல் வேளையா...356 ஐப் பயன்படுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தைக் கலைப்பான். அப்புறம் 40 எம்பிங்களையும் டில்லிலேருந்து கூட்ஸ் வண்டியில மூட்ட கட்டி அனுப்புவான்.

அதனால... ‘புரட்சி’ தமிழன்...இல்ல மானத் தமிழன்...இப்படியெல்லாம் டைப் டைப்பா பேர் போட்டுக்கிட்டு யார் வந்தாலும்...அந்த புரட்சிக்காரரு...
ஓட்டுக் கேக்கற திட்டத்துல இருக்காரா...?ன்னு தெரிஞ்சுக்கங்க.

அவர் ‘நான் மட்டும்...ஆட்சி அமைத்தால்’னு பேச ஆரம்பிச்சா...நம்மகிட்ட மிச்சம் இருக்கிற மக்களையும் போராளிகளையும் காட்டிகொடுத்து காசு பார்க்குற ஆளுன்னு முடிவு செஞ்சு அந்த ’புரட்சி’ய பொரட்டி எடுத்து தொரத்துங்க.

இல்ல...இல்ல...இவரு ரொம்ப நல்லவருன்னு நீங்க நம்பினா...அது உங்க சோத்துல மண்ணை அள்ளிப் போடப் போறதில்ல. ஒரு இனத்தோட கருவை அழிக்கப் போவுது.

ஆமா சாமி...நான் பெரிசா படிச்சதில்ல...

இருந்தாலும் சொல்றேன்...’
எந்த அரசியலைத் தேர்ந்தெடுக்கறதுங்கற உரிமை ஒருத்தரோட சொந்த விசயம்தான். ஆனா...அதோட விளைவுகள் சமூகத்தை பாதிக்கும்’ன்னு எப்பவோ படிச்ச ஞாபகம்.

’உங்கள் ஓட்டு அருமை அண்ணன் பிடல் காஸ்ட்ரோவுக்கே...’
’போடுங்கம்மா ஓட்டு சே குவாராவைப் பார்த்து’
’பனை மரத்துல வௌவாலா...லெனினுக்கே சவாலா?’

-இப்புடியெல்லாம் ஓட்டுக் கேட்டா...மேற்படி தலைவருங்க அவங்க நாட்டுங்கள்ல புரட்சி செஞ்சாங்க...?

யோசிச்சுப் பாருங்க...!

உரிமையுடன்,

இதுவரை எந்த மொள்ளமாரிக்கும் வாக்குப் பிச்சை போடாத
பட்டிக்காட்டான்

3 comments:

  1. Very good article but its very long..... very tough to read fully. I am requesting to write (edit) very short and cover all points. So that it will be easy to read.

    ReplyDelete
  2. good one. appreciate it. keep up the good work. but should make sure the core of the article gets to the hearts and minds of people.

    ReplyDelete
  3. நண்பர்களே...நீங்க சொன்னபடியே கொஞ்சம் சுருக்கிட்டேன்.
    ஆலோசனைக்கு நன்றி!

    ReplyDelete