Friday, October 9, 2009

குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்...
இது எங்க ஊரு பழமொழி.

அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான். மலையாள நாதாரிங்க முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.

தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக...பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க...கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே....ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ....இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.

இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா...எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.

நான் தெரியாமத்தான் கேக்கறேன்.
விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா...இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ...யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க...? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?

இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்...பாத்துக்கலாம்...மேட்டர் வந்துரும்...அப்பறம்...அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே...யப்பா...அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.

நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா...அட ங்கொய்யால...நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே...உன் தொழிலுக்கு என்னா பேரு...?


மீடியா...!
ப்ரஸ்...!
நான்காம் தூண்!
-நல்லா வாயில வருது.

இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி...மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க...! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.

ஆனா...இந்த சதை புரோக்கருங்க...அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு...பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?
அதாவது...நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா...
பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட...அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.

ஆனா...இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத.

சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா...’சார் நான் ப்ரஸ் சார்...என்ன என்னையே புடிக்கிறீங்க...?’ன்னு கேக்கறது.

ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா...’சார்...நான் மீடியா பர்சன்...’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.

நாலு நடிகைங்க படங்களை போட்டு...’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக...தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?

அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா...லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.

போறாளாம் பொன்னாத்தா...எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா...இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?
சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?
ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?

சரி...லெனினைக் கைது செஞ்சாச்சு.

பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்...கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.
லெனினைக் கைது செஞ்சது தப்பாம்.
அப்ப...? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா...?
கேட்டா...இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!
அரசின் அடக்குமுறையாம்!

ஆஹா...ஆஹா...இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை...?

மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே...

திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?
சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக...ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!

அவர் பேசினது கருத்து!
அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!
இன்னும் சொல்லப் போனா...அவர் மனுசன்!

நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க...!
ஆட்சியில இருக்கறவங்க...அதிகாரத்துல இருக்கரவங்க...போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு...காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!

நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.

அட...அவ்வளவு ஏன்....?

எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?
கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.
நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே...உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே...ஏன்னு சொல்லவா?

நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க...எல்லாத்துக்கும் மேல...நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!

அட...விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க...!

ஆனா...நீங்க...ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!

இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?

ஏன்யா...ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா...? இல்ல...தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா...?

பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’

இந்த நாட்டுல,,,போலீசு, பத்திரிகைக்காரதுக...இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.

போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!

சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா...
உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா...லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே...தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி...’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு...உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!

அதானே முறை?

அட...எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா...தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி...’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்...அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!

ஆனா...உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!

ஆக மொத்ததுல...
சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து...ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு...எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா...?
இதுதான் கேள்வி.

இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.

1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

கடைசியா...இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.

மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப...ஏசு சொன்ன வாசகம் இது:

‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ...அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’

இப்ப சொல்லுங்க...
உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?

14 comments:

  1. தோழா... கொசுறு கேள்வி எண் 4.
    எந்தெந்த பத்திரிகையாளருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?

    தோழா... தின மலர் ரமேஷ் நடு ரோட்ல அடிக்காத கூத்தா?

    தோழா... பத்திரிகைகார பரதேசிகளை மட்டும் தப்பு சொல்ல முடியாது... எந்த பத்திரிகையில ஒழுங்கா சம்பளம் தராணுங்க...? இந்த பத்திரிக்கை கார நாய்களும் நக்கியே பழக்கபட்டதால... உரிய சமபளத்தை நிறுவனத்துல கேட்கிறதில்லை...?


    தோழா... பக்கம் 16ம், இதை படிக்காதீங்க, inbox எழுதுற இந்த மீடியா மாமாக்களோட(அதாங்க பத்திரிகையாளருங்க) திசைநாயகத்தை ஒப்பிட்றதே அபத்தம்....!!!!!!!

    ReplyDelete
  2. தோழா... http://www.vinavu.com/2009/09/04/spy/ இந்த url கிளிக் பண்ணுங்க, நம்ம மீடியா மாமாக்களோட யோக்கியதை தெரியும்..........!!!!!!!!!!!

    ReplyDelete
  3. தப்புதான்...திசைநாயகம் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதால வருத்தப்பட்றீங்க. நம்ம புரோக்கருங்க அரைகுறையாப் படிச்சிட்டு...அது யாரு...ஜெயில் கேஸா...? ஒரு வக்கீல் இண்டர்வியூ போட்டு...பெரிய கவரா கறந்தறலாமே...ன்னு கணக்குப் போட்டுறப்போகுதுங்க.

    ReplyDelete
  4. Jeeth Panchadcharam:

    புரிவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. பத்திரிக்கை காரர்கள் செய்தது தவறா? இல்லை நடிகைகள் செய்தது சரியா? எதை சொல்ல முற்படுகிறது இந்த கட்டுரை???? இந்த ஆபாசமான பிரச்சனையில் ஏன் ஒரு நல்ல தியாக, துணிச்சல் மிக்க பத்திரிகையாளனை உங்கள் உதாரணத்திற்கு காட்டுகிறீர்கள்? தெளிவு படுத்துங்கள் எதை நோக்கியது இந்த கட்டுரை?

    ReplyDelete
  5. தவறு செய்தது - நடிகைகள் அல்லது பத்திரிகையாளர்கள் என்ற ஒற்றை விடையைத் தேடுவதைக் காட்டிலும், விபசாரம் என்ற பாலியல் சுரண்டல் முறை நிலவுவதற்கான காரணம் மேற்படி இருவர் மட்டும் அல்ல, சமூகத்தின் தலைமைக் கருத்தியலும் நடைமுறையுமே.

    இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் களையும் பொறுப்பும் கடமையும் பத்திரிகையாளருக்கே உண்டு என்பதே அவர்கள் மீதான விமர்சனத்திற்கான காரணம். மேலும் நடிகைகளின் ஆபாசம் குறித்து விமர்சிக்கும் அருகதை இவர்களுக்கு இல்லை என்ற கருத்தையே பதிவு செய்துள்ளேன். அதற்கான நியாயத்தை அன்றாடம் பத்திரிகை படிக்கும் யாவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

    திரையுலகத்தில ஆபாசம் தலைவிரித்தாடுவதும் பத்திரிகையுலகில் அது ஆதிக்கம் செய்வதற்கும் காரணம் - சமூகத் தலைமையே. உண்மையான பத்திரிகையாளர்கள் இந்த சூழலை உருவாக்கும் அரசை விமர்சிக்க வேண்டும். ஆனால்...இங்கு அவர்களும் இந்த ஆபாச வலையின் அங்கமாகவே இருக்கிறார்கள். எனவே...நடிகையின் ஆபாசம் குறித்து எழுத இவர்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? என்பதே என் கேள்வி.
    அரசை எதிர்க்கும் துணிவு இவர்களிடம் இல்லை. தங்கள் நிறுவன முதலாளியைக் கூட எதிர்த்து கேள்வி கேட்பதில்லை என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

    திசை நாயகம் - முன் மாதிரிப் பத்திரிகையாளர் என்பதால் அவரைக் காட்டி ...புத்தி சொல்ல நினைக்கிறேன்.அவர் அரசை எதிர்த்தார். இன்னும் எதிர்க்கிறார். பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படையாக நான் இதைக் கருதுகிறேன்.

    இந்த விதமான விளக்கத்தை நோக்கிய கேள்வியை எழுப்பிய தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. தலைவா...பட்டைய கிளப்பிட்டீங்க....என் வலைப்பூவிலும் நான் இதை இட்டுக் கொள்கிறேன்...

    ReplyDelete
  7. பத்திரிகையாளர்களூக்கு செருப்படி

    ReplyDelete
  8. பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!

    அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.


    பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?

    ReplyDelete
  9. http://tamilnewspoint.blogspot.com/2009/10/blog-post_6885.html

    எந்த உயிர் போகிறது , எந்த உயிர் இருக்கிறது என்று தெரியாமல் போராடுகிறது ஒரு கூட்டம்.

    யார் தே.....??? யார் தே... இல்லை என்று போராடுகிறது ஒரு இன்னொரு கூட்டம்.

    ஆனால் இருவருமே ஒறே இனம் தான்.....
    இந்த இனத்திற்கு ஒரு த....?????

    உண்மை வெளியே வருவதற்கு காலம் எடுக்கும் கண்ணா..................................

    ReplyDelete
  10. நாயடிக்கிற மாதிரி அடி. சொரணையுள்ளவனுக்குத்தான் ஒறைக்கும். மானமுள்ள எவனும் இதை ஆராயணும். நல்ல பதிவு. தொடருங்கள்....

    ReplyDelete
  11. வெறும் செருப்பால அடிச்சுருந்தா கூட இந்த மாமாக்களுக்கும்(பத்திரிக்கைகாரணுவ),
    அந்த பிராத்தல்களுக்கும் (நடிக,நடிகைகள்)உரைக்காது.

    நல்லா செருப்புல பீய தொட்டு அடிச்சுருக்கீங்க ...

    மக்களை ஏமாத்துற மயர புடுங்கிகளை சாடிய நீங்கள் தொடருங்கள் பணியை

    நல்ல விமர்சனங்களை தொடர நாங்கள் வருகிறோம் !

    ReplyDelete
  12. யுவன், கண்றாவி, எதிர்க்கட்சி, பாரதி...உங்கள் அனைவருக்கும் நன்றி!
    அதிலும் யுவன் தன் வலைப் பூவில் போட்டுத் தாக்கியுள்ள பின்னூட்டங்கள் வெகு சிறப்பு!

    ReplyDelete
  13. முத்துவுக்கு நன்றி!

    ReplyDelete