Tuesday, October 6, 2009

மக்கள் தொலைக்காட்சிக்கு ஒரு சிறப்பு விருந்து!

சென்னையில் வந்தேறியுள்ள இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருக்ஷ்ணமூர்த்தியை ஏசும் உணர்வாளர்கள் மற்றும் தலைவர்கள் பார்வைக்கு இந்தக் கட்டுரை சென்றால் நன்று.

வடிவேல் கிருக்ஷ்ணமூர்த்தி, ராஜபக்சேவின் அள்ளக்கை என்பதும் தமிழர்களை கேனையர்கள் என்றுதான் நினைக்கிறான் என்பதும் ஊரறிந்த உண்மைகள். கடந்த வாரம் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த அள்ளக்கை நிறைய திமிர்ப் பேச்சுகளை உதிர்த்தான்.

‘வன்னி முகாம்கள் மிருகக் காட்சி சாலைகள் அல்ல’
‘மீனவர்களை இலங்கைக் கடற்படை கொல்வதாகச் சொல்வது பொய!’
’இந்தியா இலங்கை எனப் பிரித்துப் பார்க்காதீர்கள். நாமெல்லாம் தெற்காசியர்கள்’

- ’இறையாண்மை’ இருப்பதாக கூப்பாடு போடும் இந்திய தேசிய பக்தர்கள் இந்த அத்துமீறிய பேச்சுகளைக் கண்டும் காணாதது போல் பம்முகிறார்கள்.

அள்ளக்கை வடிவேல் கூறிய இந்த கருத்துகள் அனைத்துமே இந்தியாவின் மூஞ்சியில் கொழும்பு ஸ்பெசல் அடுப்புக் கரியைப் பூசுபவைதானே! வன்னி முகாம்கள் குறித்து இந்திய அரசு திருவாய் திறக்கத் தொடங்கிய சில நாட்களில்...
இவன் இப்படிப் பேசியுள்ளான். மேலும்...இந்தியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் குழு வன்னி முகாம்களைப் பார்வையிடச் செல்லும் திட்டம் பரிசீலிக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்த பிறகுதான் வடிவேல் இப்படி நக்கல் செய்தான்.

ஆக...எவனைப் பார்த்து ‘எருமை மாடு’ என்று சொன்னானோ...அவன் காதில் வாங்காதது மாதிரி சமாளிக்கிறான். தமிழகத் தலைவர்கள் சிலர் தங்களுக்கு சூடு, சொரணை கொஞ்ச நஞ்சம் இருப்பதால்...இந்த கிண்டலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இப்போது...என் கேள்விக்கு வருகிறேன்.

‘நான், முகாம்களை மிருகக் காட்சி சாலை என்று சொல்லவே இல்லை’
என்று அள்ளக்கை இப்போது பல்டி அடிக்கிறான்.
அவன் கொடுத்த விருந்தில் தட்டுகளை நக்கிய ’பத்திரிகையாளர்கள’் (சீக்கிரம் இதுக்குப் பொருத்தமான வேற வார்த்தையக் கண்டுபிடிக்கணும்பா)
அவனது இந்த மறுப்பையும் செய்தியாக வெளியிட்டு...நக்கிய நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

’அது எப்படி மறுக்கலாம்? அப்ப நாங்க எழுதினது பொய்யா?’-என எந்த உண்மை விளம்பியும் கேட்கவே இல்லை.

எங்கள் தானைத் தலைவர் டாக்டர் அண்ணா பட்டம் புகழ் கலைஞர் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் (ஸ்...ப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...) மாண்புமிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட ‘மீனவர்கள் தாக்கப்படுவது’ பற்றி மத்திய அரசுக்கு (வழக்கம்போல) கடிதம் எழுதியுள்ளாரே!

அள்ளக்கை வடிவேல் சொல்வதைப் பார்த்தால்...எங்கள் தானைத் (மறுபடியும் மொதல்லேருந்தா...?) தலைவர் சொன்னதே பொய் என்று ஆகிவிடாதா?

மிக மிக முக்கியமாக இந்த ‘மறுப்பு’ச் செய்தியை விலாவாரியாக ஒளிபரப்பியதே
கலைஞர் தொலைக்காட்சிதான்!

அந்த அள்ளக் கையின் நேர்காணலைப் படம் பிடித்த தொலைக் காட்சிக்காரர்களிடம் ஆதாரம் இருக்கிறதே...அவர்கள் அதை ஒளிபரப்பி
தங்கள் நேர்மையை நிறுவலாமே!

முதல்வரே பொய் சொல்கிறார் என்பதுதான் வடிவேலுவின் குற்றச்சாட்டு. இதற்கு மறுப்பு சொல்லும் வக்கில்லாம்ல் ‘அவன் என் குடும்பததைப் பத்தி ரொம்ப கேவலமாப் பேசுவான்...நானும் அவ்னும் ஃபிரண்ட்சு’ என்று தனது தொலைக்காடிச்யிலேயே தனக்கே மறுப்பு வெளியிட்ட முதல் பெருமை எங்கள் தானைத தலை...................க்கே உண்டு.

அட...நம்ம மக்கள் தொலைக்காட்சிக்கு என்ன ஆச்சு?
அவர்களிடம் வடிவேலுவின் நேர்காணல் இருக்கிறதே!

ஆக மொத்தம்...நமது பெருமை மிகு தேசத்தில்...விருந்து, மருந்து இரண்டையும் ‘கூட்டி’க் கொடுத்தால்...பெத்தவளைக் கூட காட்டிக் கொடுக்க மாட்டார்கள்!
’யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை!’
என்ற பழமொழி நம் ஊடக யோக்கியர்களுக்குப் பொருந்தும்.

இப்போதும் ஒன்றும் மோசமில்லை.
வடிவேலு பேசிய விவரங்களை மக்கள் தொலைக்காட்சியாவது அப்படியே ஒளிபரப்பலாம். ஒருவேளை...இன்னும் விருந்தில் நனைந்த கையே காயவில்லையே என்று சங்கடப்பட்டால்...
ஆளுக்குக் கொஞ்சம் பிச்சை எடுத்து நாங்கள் ஒரு விருந்து வைக்கிறோம்.
அந்த நன்றிக்குக் கடனடைப்பதாக...அந்த நேர்காணல் பதிவை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
அப்புறம் நாங்கள் வைக்கிறோம் அவனுக்குக் கச்சேரி!

1 comment:

  1. தோழா... நீங்க எழுதியிருக்கிறதா படிச்சா, ராமதாசே ஒரு நிமிசம் shock ஆயிருவாரு... இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புதுனு அதிர்ச்சி ஆகப் போறாரு...

    ReplyDelete