Thursday, October 8, 2009

முகாம்களில்… ஒரு வேளை சாப்பாட்டுக்கு 3 ரூவா…! வந்தாரை வா.......ழ வைக்கும் தமிழகம்!

ழ உறவுகள் தமிழகத்தில் அகதிகள்எனும் அவமானகரமான பெயரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தம் குடும்பக் காவலர் கருணாநிதி அண்ணா விழாவில் தி.மு.கவின் சார்பாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்.

தம் குடும்பக் காவலர் கருணாநிதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ மக்களை எவ்வளவு கௌரவமாக நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால்...அட போய்யா வெண்ட்ரு குடியுரிமையாவது கும்மாங்காவதுஎன்று கடுப்பாவது சாமி சத்தியம்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசு போடும் பிச்சைக்கு பணக்கொடைஎன்று பெயர். இந்த பணக்கொடைப் பட்டியல் இதோ:


வ.எண்

குடும்ப உறுப்பினர்

பணக்கொடை

(மாதம் ஒன்றுக்கு)

1

குடும்பத்தலைவருக்கு

ரூ.400

2

அடுத்த பெரியவர்கள்

ரூ.288

3.

முதல் குழந்தை (12 வயதுக்குக் கீழ்)

ரூ. 180

4.

அடுத்த குழந்தைகள்

ரூ. 90

(அரசாணை எண் 755, பொது (ம.வா) நாள் 31-07-2006)

எப்படி எங்கள் தாராள மனது?

பெரியவர் என்றால் வயதானவர். வயதானவர்கள்தானே பல்வீனமாக இருப்பார்கள். அதுவும் போர் நடந்த மண்ணில் இருந்து வந்தவர்கள். பல்வேறு உடல் குறைபாடுகளுடன் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் 288ரூபாய் ‘கொடை’. அப்படியானால் ஒரு நாளைக்கு 9 ரூபாய் 60காசு. ஒரு வேளைக்கு 3ரூபாய் 20 காசு

ஒரு குழந்தைக்கு இதே கணக்கின்படி ஒரு வேளைக்குக் கிடைக்கும்கொடை’ 1 ரூபாய்! . அடேங்கப்பா...இவ்ளோ காசை வச்சுக்கிட்டு இந்த அகதிங்கள்லாம் என்னதான் பண்ணுறாங்களோ என்று பொறாமையாக இருக்குமே!

மச்சி வீடு கட்டி வேலிக் கணக்குல வெள்ளாமை விட்டு, வீடு முழுசும் சொந்த பந்தங்களை வச்சு வித விதமா சமைச்சுப் போட்டு அதுக சிரிக்கறதப் பார்த்து தானும் சந்தோசப்பட்ட இனம் இது!

மனசாட்சி மண்ணாங்கட்டியெல்லாம் வேணாம்...தயவு செய்து உங்கள் பார்வையில் படும் எந்தப் பிச்சைக்காரரையும் கேட்டுப் பாருங்கள். அவர் இதை விடப் பல மடங்கு அதிகமாகவே சம்பாதிக்கிறார்!

சார் கவர்மெண்ட்...அதுங்களுக்கு மானிய விலையில் அரிசி தருது... ஆக்சுவலா அதுங்களுக்குப் பெரிய செலவே இல்ல சார்

என்று சிக்கன் சூப் உறிஞ்சிக் கொண்டே ஊர் நியாயம் பேசும் மிடில் க்ளாஸ் மன்னர்களுக்கு ஒரு தகவல்!

மானிய விலையில் தரப்படும் அரிசியைப் பற்றிய பட்டியல் இதோ:

வ.எண்

குடும்ப உறுப்பினர்

வயது

அரிசியின் அளவு

1

பெரியவர்

8 வயதுக்கு மேல்

தினசரி 400 கிராம்

2

சிறியவர்

8 வயதுக்கு கீழ்

தினசரி 200 கிராம்

(மைய அரசு கடித எண்.1 (26) /83-RH/1 தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் நாள் 19.12.1983)

அதாவது... எட்டு வயது முடிந்து ஒரு நாள் ஆனாலும்...20 வயது ஆனாலும்...40 வயது ஆனாலும்...80 வயது ஆனாலும் அவர்கள் ஒரு நாளைக்கு 400 கிராம் அரிசிதான் சாப்பிட வேண்டும்!

கசாப்புக் கடைக்குப் போற ஆடு கூட சரியா தீனி தின்னுச்சா...முறையா பராமரிக்கப்படுதான்னு பார்க்க அரசாங்க அதிகாரிங்க கசாப்பு வளாகங்கள்ல சோதனை நடத்தறாங்க தெரியுமா நண்பர்களே!

இதெல்லாம் கூட பரவாயில்லை என்று நினைக்க வைக்கும் அடுத்த தகவலைப் பாருங்கள்.

‘அகதிகளின் இறப்பின்போது இறுதிச் சடங்கிற்கு ரூ 100/ எரியூட்டும் அல்லது ஈமக்கிரியை செலவாக அரசால் வழங்கப்படுகிறது (அரசாணை எண்.49532/ம.வா.1/05-1, பொதுத்துறை நாள் 10.12.2006)

ஒரு மாலை வாங்க முடியுமா?

ஒரே ஒரு மூங்கில் கழி?

ஒரே ஒரு கோடித் துணி?

பாடை கட்ட கயிறு?

எரிக்கும் தொழிலாளி கூட 100 ரூபாய்க்கு வேலை செய்ய மாட்டாரே...!

அடத் தூ...இதெல்லாம் ஒரு அரசாங்கம்...இதுக்கு ஒரு அரசாணை...! மானங்கெட்டதுகளா...!

மூன்று வேளை சாப்பாடு போட வக்கில்லை. செத்தால் கூட பிணத்தை எரிக்கக் காசு கொடுக்கத் துப்பில்லை. இந்த லட்சணத்தில் இந்த அரசாங்கம் இவர்களுக்குக் குடியுரிமை வாங்கிக் கொடுக்குமாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக் கை தட்டுவோமாம்!

துப்பு கெட்ட நாய்களே...

நீங்க குடியுரிமை வாங்கித் தர்றது இருக்கட்டும். முதலில்...எங்க மக்கள் மூணு வேளை சோறு திங்கறதுக்கு வழி பண்ணுங்க!

4 comments:

  1. பட்டிக்காட்டான் பட்டியலிட்ட செய்திகள் எத்தனை
    பேருக்குத் தெரியும்.குறிப்பாக எத்தனை ஈழ ஆதரவு
    உணர்வாளர்களுக்குத் தெரியும்? பெரும்பாலும் இது
    தெரியாத காரணத்தால்தான்
    தமிழ் ஈனத் தலைவர்கள்
    எது வேண்டுமானாலும் பேசுகின்றார்கள்.குடியுரிமை
    வாங்கித்தருவார்கள்,நாடாளுமன்றகுழுவையும் அனுப்புவார்கள். என்னிடம் ஒரு சின்னகேள்வி இருக்கிறது,ஆனால் பதில் தெரியவில்லை.
    உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
    குடியுரிமைக் கொடுக்கப்பட்டால் அவர்கள்
    ஈழத் தமிழர்களா? அல்லது ஈழஇந்தியத் தமிழர்களா? அவர்களுடைய பண்டைய வாழ்விடங்கள் அப்பறம் யாருக்குச் சொந்தம்?
    இப்போது போகப்போகும் குழு பான்கிமூனை விட
    அதிகமாக என்ன பார்த்துவிடமுடியும்?
    ஒருவேளை முள்வேலிக்குள் இருக்கும் ஏதிலிகளையும் இங்கே அழைத்து வந்து குடியுரிமை வழங்கிவிட்டால் ஈழப்பிரச்சனை இனிதே முடிந்துவிடுமல்லவா?
    உளறுவாயனைவிட நன்றாக உளறுகிறேனா?

    ReplyDelete
  2. நண்பரே...தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இதையெல்லாம் படித்தால் உணர்வு வந்துவிடுமா இந்த இனத்துக்கு?
    தன் இனத்தை சேர்ந்தவனை நிர்வாணமாக்கி சுட்டுக்கொன்ற காட்சியை பார்த்துகூட கலங்காதவன் பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தவுடன் கொதித்து போய் வழக்கு போடுகிறான். அங்கே குண்டு மழையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படும் போது எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இங்கே வாக்கு சேகரித்து கொண்டு இருக்கிறான்.சாமானியன் தன் இப்படி என்றால் "சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்"; "மழை பெய்தால் தூவானம் அடிக்கும்" என்று பேசும் தலைவர்கள் வேறு இந்த இனத்துக்கு. இன்னுமா இந்த இனத்தை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்களுக்கு?

    ReplyDelete