Wednesday, March 3, 2010

நித்தியானந்தா… மெட்டி ஒலியை மிஞ்சிய ஜட்டி ஒலி ரேட்டிங்க்!

’கதவைத் திற காற்று வரட்டும்’னு ரைமிங்கா சொல்லத் தெரிஞ்ச சாமிக்கு ‘கதவைத் திறக்கலன்னாலும் கேமரா’ வரும்னு தெரியாமப் போச்சே...! என்ன கொடுமைய்யா இது! ரெண்டு நாளா தமிழ்நாடே பரபரக்குது. நெற்றிக்கண்ணைத் திறந்து அநீதிகளைத் தட்டிக்கேக்கிற நக்கீரன் சேல்ஸ் நேத்து பிச்சிக்கிச்சி. சென்னையில நக்கீரன் பொஸ்தவம் 25 ரூவா! அம்புட்டு ஆர்வம் நம்ம வாசகர்களுக்கு. பின்னே...அநீதியத் தட்டிக் கேக்கறதுன்னா...போட்டி போட்டுக்கிளம்பற பயபுள்ளகளாச்சே...!

’அதுவும் நம்ம ரஞ்சிதா…அடுத்தவனோட படுக்கறதா…?
நான் எத்தனை வருசமா கனவு கண்டுக்கிட்டிருக்கேன்…பய புள்ள ஏமாத்திப்புட்டாளப்பா…!
இந்த அநீதியத் தட்டிக்கேட்டே ஆவணும்! வாங்கு நக்கீரனை…!
படத்தப் பார்த்தாவது தணிச்சுக்குவோம்…தாகத்த…!’

அட...இந்த சன் டிவி...
என்னா டி ஆர்பி ரேட்டிங்கு...! மெட்டி ஒலியை விட இந்த ஜட்டி ஒலிக்குத்தான் ரேட்டிங் அதிகமாம் சாமி. அதனால...’கெளம்புங்கடா கேமராவைத் தூக்கீட்டு...ங்கொய்யால எங்கெல்லாம் முக்கல் முனகல் கேக்குதோ அங்கெல்லாம் இண்டு இடுக்காப் பார்த்து செட் பண்ணுங்க...’ன்னு சேனலே அல்லோலகல்லோலப்படுதாம்.

நக்கீரன் இணையத் தளத்துல உள்ள அறிவிப்பப் பார்த்துட்டு எனக்குப் புல்லரிச்சுப்போயி பெரிய வக்கப்போராப் பார்த்து நேத்து முழுக்க ஒரசி ஒரசி சொறிஞ்சும் அரிப்பு அடங்கல. ‘நித்தியானந்தம் - ரஞ்சிதா லீலைகள் முழு நீள வீடியோ காண subscribe செய்யுங்கள்’-ங்கறதுதான் அந்த அறிவிப்பு!

நக்கீரன், சன் டிவி குரூப்புங்களே...நித்தியானந்தம் ரஞ்சிதா பலான படத்துல நீங்க கட்டற கல்லாவுல அவுங்க ரெண்டு பேருக்கும் எதுனாச்சும் கமிசன் குடுப்பீங்களா? இல்ல...அம்புட்டும் ஒங்க ரெண்டு பேருக்கு மட்டுந்தானா?

எனக்கு என்னா வெசனம்னா...பட்ஜெட்ங்கற பேர்ல...என்னைப்போல சாமானியனுகளோட சங்க அறுக்கற மாதிரியான திட்டங்கள டில்லி ராஜாக்கள் தீட்டி மூணு நாள் கூட முழுசா முடியல...ஏற்கனவே பாதி சனம் அரை வயித்துக் கஞ்சிக்கே வக்கில்லாம, ‘வாழ்ந்துக்கிட்டிருக்கோமா? இல்ல செத்துக்கிட்டிருக்கோமா?’ங்கற கொழப்பத்துல இருக்கு. இந்த லட்சணத்துல மேலும் இருவது சதவீதம் விலை உயரும்னு அவனவன் அரண்டு போயிருக்கான். இந்த பஞ்சாப், உபி, மபியிலல்லாம்...’ஏய்...த்தா...வெலையக் கொறடா...’ன்னு சனம் வீதி வீதியா கொடி புடிக்குது. அதேமாதிரி நம்ம தமிழருங்களையும் உசுப்பேத்தி உட்டா பத்திக்குமேன்னு கனவு கண்டுக்கிட்டிருந்தேன்.

முழிச்சுப் பார்க்கறதுக்குள்ள பலான படத்தக் காட்டி உசுப்பேத்தி உட்டு...போராட்டம் பத்த வேண்டிய நேரத்துல அவனவனும் ‘ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு’ன்னு ஹை பிச்சுலல்லய்யா பாடறான்! இந்த லட்சணத்தில...கல்கி சாமி, கோயம்புத்தூர் சாமின்னு வரிசையா பட ரிலீஸ் வேற!

ஆகமொத்தம்...இந்த பட்ஜெட்டு வெற்றிகரமா தமிழ்நாட்டுல நிறைவேற்றப்பட்டிருச்சு!

‘அட...என்னய்யா நீ...எதுலப்பாரு குத்தம் சொல்றியே... இதுவும் ஒரு சமூகப் பெரச்சனதான?ன்னு செலபேரு கேக்கறாங்க. அப்புடி ஒரு நம்பிக்கை எனக்கும் இருந்துச்சு. எதுவரைக்கும் தெரியுமா?

காஞ்சி சங்கராச்சாரி – சொர்ணமால்யா பலான மேட்டர், சங்கராச்சாரி கொலை கேசு...இதெல்லாம் சனநாயகக் காவலருங்களான மீடியாக்காரங்களால பிரிச்சு மேயப்பட்டப்போ...’அட...இதுக்குப்பொறகு பாரு...ஒரு பயலும் காஞ்சிபுரத்து பஸ்ல கூட ஏற மாட்டான்...அட...அந்த ஊரே காலியானாலும் ஆச்சர்யமில்லப்பு... இந்த சங்கராச்சாரி...இம்புட்டு மோசமானவனா...ன்னு அந்தாளு சாதிக்காரங்களே...காறித்துப்பிடுவாய்ங்க...’ன்னு ஓசி டீ குடிச்சிட்டு ஒளறிக்கிட்டிருந்த பரதேசிங்கள்ல நானும் ஒருத்தந்தான்!

என்ன ஆச்சி...?
’போங்க தம்பி...நாங்க பாக்காத பிட்டுப் படமே கெடையாது...எவ்ளோ பார்த்தாலும் எவன் படம் பார்த்தாலும்...கத்துனதும் கிடையாது...அவனைப் பார்த்து நாலு சாத்து சாத்துனதும் கிடையாது...பாத்தோமா அடுத்த படத்துக்கு வெயிட் பண்ணினோமான்னு இருக்கோம்...நீ என்னமோ பீத்தற...ஹே ஹே...’ன்னுட்டாய்ங்க நம்ம ஆளுங்க.

இன்னிக்கும் காஞ்சி மடம் அதே மருவாதியோடத்தானே இருக்கு!
மடத்து சாதிக்காரங்க...சங்கராச்சாரியை ஒதுக்கியா வச்சுட்டாங்க?

அட அத வுடுங்க...
பிரேமானந்தா சார்...இன்னுக்கும் ஜெயில்ல இருக்காப்ல. ஆனா அவரு ஆசிரமங்கள்லாம் நல்லபடியாத்தானே சாமி ஓடிக்கிட்டிருக்கு...! கொலை, கற்பழிப்பு…ன்னு கேஸ் போட்டு அந்த கேஸ்லாம் நிரூபிக்கவும் பட்ட பொறவும்….பிரேம்ஸ் ஆசிரமங்களுக்குக் கோடி கோடியா பணம் குடுக்கறவங்க யாரு…?

தர்மபுரம் ஆதீனம்…ஞாபகம் இருக்கா?
வாரிசுப் போட்டியில…பெரிய ஆதீனத்தை சின்ன ஆதீனம் கொல்லப் பார்த்துச்சு…மடத்துக்குள்ள ஏகப்பட்ட பலான மேட்டருங்கன்னு பரபரத்துச்சு…இப்ப என்ன ஆச்சு?
’ச்சீ…நீங்கள்லாம் இவ்ளோ கெட்டவங்களா?...ன்னு மக்கள் எல்லாம் தர்மபுரம் ஆதீனத்தை வெலக்கி வச்சுட்டாங்களா?
இன்னிக்கும் பல ஆயிரம் கோடி ரூவா சொத்து இருக்கு…அந்த ஆதீனத்துக்கு…!

காஞ்சிபுரம் தேவநாதனோட பிட்டுப் படத்தப் பார்த்த பொறவு…
பொம்பளைங்க யாரும் கோயிலுக்குப் போறத நிறுத்திட்டாங்களா?
இல்ல…
’…த்தா…உள்ள வச்சு ஜல்சா பண்றதுக்காகத்தான்…எங்களையெல்லாம் கருவறைக்குள்ள வுட மாட்டேங்கறீங்களாடா…?’ன்னு ஒரே ஒரு பொதுசனம் கேட்டு…உள்ள நொழைஞ்சு பார்த்ததா சேதி உண்டா?

அட இந்த ஜக்கி…கஞ்சா கடத்துதுன்னு எழுதுன அதே நக்கீரந்தான்…ஜக்கியோட தத்துவ பொஸ்தவத்தைப் போட்டு விக்குது…
எவன் கேக்கறது?

சாயி பாபாவைப் பத்தி...எளுதாத பலான மேட்டரா?
இன்னிக்கு...?
அந்த யோக்க்கியரு...தமிழ்நாட்டு அரசுக்கே 500 கோடி ரூவா ஒதவி பண்றாரு...
என்னா...நக்கலு...தெனாவட்டு...திமிரு...?ன்னுதான் எம்மனசு அடிச்சுக்குது...
ஆனா...அமைச்சருங்களே அந்த பாபாவோட பக்தருங்களாமே...
எங்க போயி முட்டிக்கறது?

இதுக்கும் மேல பட்டியல்களை எழுதுனா...எனக்கே ஏதோ பிட்டுப் படத்துக்குக் கதை வஜனம் எழுதுற மாதிரி கூசுது...
அதுனால மேட்டருக்கு வர்றேன்...

இந்த பலான சாமியாருங்களை வச்சு பலான படம் எடுக்கறதால...சேனல்காரனுங்களுக்கும் பத்திரிக்கைக்காரனுங்களுக்கும்தான் லாவமே தவிர...
நமக்கு இதுனால...ஒரு மயித்துக்கும் புண்ணியமில்ல...!

இப்ப சொல்றேன் எழுதி வச்சுக்கங்க...
நித்தியானந்தத்துக்குப் பத்தாயிரம் கோடி ரூவாய்க்கு சொத்து இருக்காம்...இன்னும் ஒரே ஒரு வருசம் கழிச்சுப் பாருங்க...அது பத்தாயிரம் கோடியே ஒரு ரூவாய்...ன்னு ஆனாலும் ஆகுமே தவிர...ஒரு ரூவா கூட கொறையாது...

இந்த மாதிரிப் படம் வெளியாகும்போது சம்பந்தப்பட்ட சாமியாருக்குக் கருப்புக் கொடி காட்டறதனால...கருப்புத் துணி சேல்சு வேணா அதிகமாகும்...வேற ஒன்ணும் ஆவப் போறதில்ல...

அதேமாதிரி...பேனர் கிழிக்கிறது...ஆசிரமத்தை ஒடைக்கிறது...இதெல்லாம் சும்மா...நம்மள மாதிரி பாவப்பட்டதுக செய்யற வேலை...!

ஆனா...இதுனாலல்லாம்...எந்தச் சாமியாருக்கும் எந்தப் பெரச்சினையும் இல்ல...ஏன்னா...பேனர் கிழிக்கிறவங்களோ...மடத்தஅடிக்கிறவங்களோ அந்த சாமியாரை வளர்க்கலை...!

சாமியாருங்களை வளர்க்கறவங்கள்லாம் யாரு தெரியுமா?

எந்த சன் டிவி இந்த பலான படத்தப் போட்டுச்சோ...அந்த சன் டிவியோட ஓனர் குடும்பங்களும்...
எந்தப் பத்திரிகைங்க...நித்தியானந்தத்தைக் கிழிக்குதோ...அந்த பத்திரிகை ஓனர் குடும்பங்களும்...

’கழுத்து வரைக்கும் தின்னுப்புட்டேன்...டைஜஸ்ட் ஆகல சாமி...நீங்கதான் காப்பத்தணும்...’னு கவுன்சிலிங்குக்குப் போறதுகளும்...

’என் புருசன்...என்னைக் கவனிக்கவே மாட்டேங்கறாரு சுவாமிஜி...கேவலம் ஒன் க்ரோர் சம்பாதிக்க...ஒன் மந்த் வெளியூர் போயிடறாரு...தனியா இருக்கவே கஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்ட்மா இருக்கு...’னு பீல் பண்றதுகளும்...

’சுவாமிஜி...அக்கவுண்டல வராத அமவுண்டா நூறு கோடி இருக்கு...என்ன பண்றதுன்னே புரியல...படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதுன்னா பாருங்களேன்...தட் மச் ஸ்டெர்ஸ்...’னு பொலம்புற பெருச்சாளிகளும்...

‘அந்த சாமி நல்லா யோகா கத்துக்குடுப்பாரு சார்...செம ரிசல்ட்டு...மைண்ட் ஃப்ரீயா இருக்கு..நீங்களும் வர்றீங்களா...’ன்னு கேட்டு...யோகா மாஸ்டருங்களையெல்லாம் சாமின்னு நினைச்சுக் கும்பிடற அப்பாவி மிடில் க்ளாஸ்சுங்களும்தான்...சாமியாருங்களை சிக்கன் மட்டன் குடுத்து வளர்க்கறது...!

இப்புடி வளர்த்துவுட்ட பொறவு...
கொழுப்பும் தெனவும் ஏறிப்போய்... அவனுங்க உடம்பு வெத வெதமான பொம்பளைங்களைத்தான் கேக்கும்!

இப்ப சொல்லுங்க...நித்தியானந்தம் ஆசிரமத்தை அடீச்சு நொறுக்கறதுக்கு...மேல சொன்ன குரூப்புங்கள்ல எந்த குரூப்பு வரும்?

கடைசி குரூப்பு இருக்கே...யோகா குரூப்பு அதுல மட்டும்தான் கொஞ்ச பேருக்கு மானம் மருவாதி சூடு சொரண இருக்கும்...மத்ததுக வாழ்க்கையில...பொண்டாட்டி புருசன்ங்கற வார்த்தைங்களைவிட....சக்களத்தி... கீப்பு...அயிட்டம்...மாதிரியான வார்த்திங்கதான் பொழக்கத்துலயே இருக்கு...

அதுங்க இந்தப் படத்தைப் பார்த்தா என்ன தெரியுமா சொல்லும்...?
‘ஏய்...அங்க பாருடீ..ரஞ்சிதா ஃபேஸ்ல ஒரு பேச்ச் இருக்கு...ஏதோ லோக்கல் க்ரீம் யூஸ் பண்ணுவா போல...சுவாமிஜிட்ட போகும்போது கூட இப்புடியா போறது...நான்லாம் கார்னியர்தாம்பா’
-இந்த ரேஞ்சுலதான் இருக்கும் ரெஸ்பான்சு...!

அதுனாலதான்...பலான கேஸ்ல சிக்குனாலும் சாமியாருங்க வளர்ந்துக்கிட்டே இருக்காய்ங்க...

அதனால...
நக்கீரன், சன் டிவி மாதிரி செக்ஸ் வியாபாரிங்க காட்டற படத்தைப் பார்த்துப் பொங்காம...நெதானமா ஒக்காந்து யோசிங்க...
இந்த மாதிரி பலான படம் மறுபடி காட்டுனாய்ங்கன்னா...போனைப் போட்டு...ஒங்களுக்குத் தெரிஞ்ச எல்லாக் கெட்ட வார்த்தைங்களையும் யூஸ் பண்ணித் திட்டுங்க...
இல்லன்னா...
அந்த வார்த்தைங்களையெல்லாம் கொட்டி கடுதாசியா எழுதி...அனுப்புங்க...
ஒங்க சொந்த பந்தங்கள்கிட்டப் பேசி...அந்தக் கருமத்தப் பார்காதப்பு...னு சொல்லுங்க...

இதெல்லாம் பன்னி ஒதர்ற சேறு நம்ம மேல தெறிக்காம இருக்கறதுக்காக...
பன்னிய எப்புடி வெரட்டறது?

தூக்கம் வரலை...உடம்பு பெருக்குது...பிஸினஸ் டல்லாயிருக்கு...மனசே சரியில்ல...இப்புடிப்பட்ட காரணங்களுக்காவ...அந்தப் பன்னிங்களைத் தேடிப் போவாதீங்க...
ஆசைய அடக்கிக்கிட்டு...உடம்பால ஒழைச்சு...நல்லா கவனிங்க...வெறும் மூளையால இல்ல...ஒடம்பால ஒழைச்சு...வாழ்ந்துக்கிட்டிருந்தா...
தூக்கம் நல்லா வரும்...ஒடம்பும் பெருக்காது...!

நான் ஆசையே படறதில்ல சார்னு சொல்லிக்கிட்டு...
’பையனோட எல்கேஜ்ஜி ஸ்கூல் பீசு...ஜஸ்ட் இருவதாயிரம்தான்...
ஏசி இல்லன்னா என்னால தூங்கவே முடியல சார்...என் பையன் ஏசி நின்னா ஒரே செகண்டுல முழிச்சுடுவான்...
அம்பதாயிரம் இல்லன்னா மாசத்தை ஓட்ட முடியலைங்க...இதுல இருவதாயிரம் லோனுக்கே போவுது...’
-இப்புடியெல்லாம் டயலாக் வுடறதா இருந்தா...அதெல்லாம் ஆசை இல்லதான்...!
ஆனா...
பேராசை...!

அடப் பாவி...இதுகூட இல்லாம எப்புடீ வாழறது?ன்னு கேட்டா...கொஞ்சம் செலவு பண்ணி...ஒங்களுக்குத் தெரிஞ்ச கெராமங்களுக்குப் போய்ப் பார்த்துட்டு வாங்க...(சிட்டி லிமிட்லேருந்து குறைஞ்சது நூறு கிலோ மீட்டர் இருக்கற ஊராப் பாருங்க) முடிஞ்சா தங்கிப் பாருங்க...

அங்கெல்லாம்தான் யோகாவும் இல்ல...சுவாமிஜியும் இல்ல!

அதுவும் சீக்கிரம் போறது நல்லது...
ஒரு ரூவா அரிசியும் இலவச டிவியும் போயி...அங்கயும்...சுவாமிஜிகளுக்கான டிமாண்டை உருவாக்கிக்கிட்டிருக்குங்கோ...!

1 comment:

  1. குத்துஙக எசமான் குத்துங்க... இந்த மீடியாகளே இப்படித்தான்....

    ReplyDelete