Friday, January 15, 2010

சர்க்கர வியாதியா…? சர்க்கர சாப்பிடுங்க!

நம்ம தமிழருங்களை சாதி பிரிச்சு வச்சிருக்குன்னு சில பேரு வருத்தப்படுவாங்க. ஆனா நான் அத நினைச்சுக் கவலைப்படறது இல்ல. ஏன் தெரியுமா? சாதி பிரிச்சாலும் அவங்களை ஒண்ணு சேர்க்கறதுக்குன்னே ரெண்டு விசயங்கள் இருக்கு.
ஒண்ணு வியாதி
இன்னொண்ணு கடன்.

ஊர் ஊரா சுத்தி ஆராய்ச்சி செஞ்சதுல எங்க குரூப்பு கண்டுபுடிச்ச ரகசியம் இது. ஒங்கள்ல எத்தனை பேரு வியாதியோட வாழ்க்கை நடத்தறீங்களோ தெரியல. ஆனா, சத்தியமா ஒண்ணு மட்டும் தெரியும். இதப் படிச்சு முடிச்சதும், ’சரியான நாட்டுப்புறத்தான் பாஸ்...சயிண்டிபிக் அட்வான்ஸ்மென்ட் இன்னும் இவனைப் போய் சேரல’ன்னு என்னை நினைச்சு ஒரு துளி கண்ணீராச்சும் சிந்துவீங்க.

’தமிழனை சாதி பிரிக்குது
வியாதி ஒண்ணு சேர்க்குது’
-ங்கறதுதான் எங்களோட லேட்டஸ்ட் பொன்மொழி!

இப்ப பாருங்க...ஏதாச்சும் பொது எடத்துல நாம சந்திக்கும்போது என்னா பேசறோம்?
’ஹலோ சார்...என்ன ரொம்ப எளைச்சிட்டீங்க? சுகரா?’
’இல்ல சார்...ஒபீசிட்டி இருந்துச்சு...அதான் வொர்க் அவுட் பண்ணி...ட்வண்டி கேஜி கொறைச்சேன்... ஆமா...நீங்க ஏன் இவ்ளோ பல்க்கியா இருக்கீங்க...கொலஸ்ட்ராலா...?’
‘இல்ல சார்...சுகர் லெவெல் கம்மியாயுடுச்சி...95 தான் இருக்கு சார்...’

-இப்புடித்தானே நம்ம ஒத்துமையக் காட்டிக்கிறோம். பொம்பளைங்க பேச்சு வேற வெவரங்களோட இருக்கும். அதச் சொன்னா...நான் மேல் சாவனிஸ்ட்டாயிருவேன்.

முப்பது வயசத் தாண்டினதும், வாக்கிங்க் ஜாகிங் போறது இன்னிக்கு பல்லு விளக்கற மாதிரி கக்கா போறது மாதிரி காலைக் கடன் ஆயிடுச்சி. இதுல வேற...வாக்கிங்க் போற எடத்துல...எதிர்ல வர்ற ஆளைப் பார்த்து...’ஹலோ சார்...இன்னிக்கு எத்தினி கலோரி பர்ன் பன்ணீங்க..?’ன்னு புள்ளி வெவரம் கேட்டு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கறது.

ஆனா...எனக்கு ரொம்ப நாளா இருக்கிற சந்தேகம் என்னான்னா...
’அட..இந்த ஆளுங்க...காலையில வெட்டியா இந்த நடை நடக்கறாங்க...பகல்ல பக்கத்து வூட்டுக்குகூட பைக் எடுத்துக்கிட்டுப் போறாங்களே...’ங்கறதுதான். ஆனா...இத யார்கிட்டயும் நான் கேட்டதில்ல. ’க்ண்ட்ரி ப்ரூட்...ஸ்டுப்பீட்’னு ஏடாகூடமா ஏசிட்டா...என்னா பண்றதுன்னு ஒரு அச்சந்தான். மாடிப்படி ஏற லிப்டு, சாப்பிங்க் மாலுக்குப் போனா...எலிவேட்டரு, காரு, பைக்குன்னு... நடக்காம வாழறதுக்குன்னே நெறய கண்டுபிடிச்சு வச்சிருக்கும்போது...பகல்ல எந்தக் கேனப் பயலாச்சும் நடப்பானா?ன்னு எனக்குள்ளயே ஒரு அசரீரி கேக்குது.

எங்க ஊர்லல்லாம்...இந்த சர்க்கர வியாதின்னா என்னான்னே தெரியாது.ஒபீசீடி ஏபீசீடி இந்த மாதிரிப் பேருங்களையெல்லாம் எங்காளுக கேள்விப்பட்டதும் இல்ல. கொஞ்சம் குண்டா இருக்கற ஆளுகளைப் பார்த்தா எங்க அம்மாச்சி...’தின்னுப்புட்டு கொளுத்துப் போயி கெடக்கு பாரு...தேர மாதிரி...போய் எதுனாச்சும் வேலை வெட்டி செஞ்சாத்தானே...கறி எளைக்கும்’னு பட்டயக் கெளப்பும்.
ஆனா...அதுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான். டெக்னாலஜி, சயிண்டிபிக் அட்வான்ஸ்மெண்ட் இதெல்லாம் அதுக்குப் புரியாது.
தெரிஞ்சிருந்தா...’ஒரே மாசத்துல டென் கேஜி வெயிட் லாஸ் பண்ணணுமா...? ஜஸ்ட் ஒரு லட்சம் ருபீஸ்தான்’னு வெளம்பரம் பண்ற கம்பெனிக்கு ஆள் அனுப்பற வேலையப் பார்த்து நாலு காசு சம்பாதிச்சிருக்கும்.

ஆனாலும்...எனக்கு இருக்கற சந்தேகம் என்னான்னா...சக்கர வியாதி, ஹார்ட் அட்டாக்கு, குண்டு ஒடம்பு, கொலஸ்ட்ராலு இப்புடிப் பல பிரச்சினைகளுக்காக லட்ச லட்சமா செலவு செஞ்சு ஜிம்முக்குப் போறவங்க...வொர்க் அவுட் பண்றவங்க...வாகிங்க் போறவங்க...ஜாகிங்க் போறவங்க...எல்லாரும்...அவுங்க அவுங்க வூட்டுலயே ஒரு தோட்டம் போட்டு...காய்கறி விளைய வச்சா என்னா?
’அட...ங்கொய்யால...என்னா திமிரு பார்த்தியா இவனுக்கு...?’ன்னு நீங்க திட்டுனாலும் பரவாயில்ல...நமக்கு சூடு சொரணை எல்லாம் கொஞ்சம் கம்ம்மிதான்னு வச்சுக்கங்க.

எதுக்குச் சொல்றென்னா...ஒங்களுக்கு என்னா பிரச்சினை? ஒடம்புல தேவைக்கு அதிகமா...கொழுப்பு சேரக்கூடாது...கலோரி இருக்கக் கூடாது...அதுக்கு வேலை செய்யணும்...அதாவது ஒடம்பு வணங்கணும்...அதானே...?

மண்வெட்டியப் புடிச்சு நாலு கொத்து கொத்துனா...கொழுப்பு கலோரியெல்லாம் வேர்வையோட வேர்வையா டீசண்டா டிஸ்போஸ் ஆயிரும்கறது எங்க ஊர் நம்பிக்கை. அதுமட்டுமில்ல...ஒங்களுக்குக் காய்கறி செலவும் மிச்சம்...நீங்களே போட்ட காயை நீங்களே சாப்பிடும்போது எக்ஸ்ட்ரா டேஸ்ட் இருக்கும்கறதும் எங்க ஊர் அனுபவம். வீடாவது... தோட்டமாவது...எங்க வீடே அபார்ட்மெண்டுல தொங்கும் தோட்டம் மாதிரி இருக்கு...ன்னு புலம்பினா... நான் என்னா பண்றது?

’பேசாம...அந்த சனியன் புடிச்ச ஊர விட்டுட்டு...சொந்த ஊருக்குப் போங்க’ன்னு நான் சொல்ல முடியுமா? அப்புடிச் சொன்னா...’அந்த ஊர்ல என்னா...எம்ப்ளாய்மெண்ட் இருக்கு?ன்னு எதிர்க் கேள்வி கேப்பீங்க. நம்மளப் பொறுத்தவரைக்கும்...

சம்பாதிக்கறதுக்காக...ஊர விட்டுப் போகணும்...
அப்பொறம்...அந்த ஊர்ல இருக்கறதுக்காக சம்பாதிக்கணும்...(சர்வைவல்தானே சார் முக்கியம்?)

அப்பொறம்...வைத்திய செலவுக்காகவே சம்பாதிக்கணும்...(ஹெல்த்தப் பார்த்துக்கோங்க சார்...ஹெல்த் இஸ் வெல்த்)

இல்லன்னா...நாப்பதுக்குள்ளேயே மாரடைப்பு...சக்கர...ன்னு சில பல பதக்கங்கள வாங்கிக் குத்திக்கிட்டு வாக்கிங் ஜாகிங்னு காலத்த ஓட்டணும்...
-இதானே...நம்ம கொள்கை கோட்பாடு!
நாம...வாழவா பொறந்தோம்?
சாவத் தள்ளிப் போடத்தானே பொறந்தோம்!

அதனால....சொந்த ஊருக்குப் போறதெல்லாம்...பொச கெட்டப் பயலுக செய்யறது வுட்டுத் தள்ளுங்க...!

கடைசியா ஒண்ணு சொல்றேன்...
நீங்க...சுகர் ப்ரீன்னு லேபிள் ஒட்டின...சர்க்கரக் கட்டிங்களை மட்டும்தான் சாப்புடுறீங்களா...? ஐயோ சாமீ...ஆபத்து...!

அத மட்டும் சாப்புட்டா....ஏகப்பட்ட வில்லங்க வியாதிங்க வருதாம்....அதுக்குப் பதிலா...அளவா...நாட்டுச் சக்கரதான் சாப்புடணுமாம்! நாட்டுச் சக்கரய நீங்க மறந்திருப்பீங்க...
கருப்பா இருக்கும். கொஞ்சூண்டு போட்டாலும் தித்திக்கும். கரும்புல எடுத்தா நாட்டுச் சக்கர. பனையில எடுத்தா கருப்புட்டி. இதுகளைச் சாப்பிட்டா...அளவா சாப்பிட்டா நல்லதாம். இதையெல்லாம் எங்க அம்மாச்சி சொன்னப்ப நானே நக்கல் பண்ணவந்தான். ஆனா...இப்ப இத சொல்லியிருக்கறது...மெத்தப் படிச்ச மருத்துவ மேதைங்க...!

என்னாடா...எல்லாத்தையுமே தலகீழா சொல்றானேன்னு நீங்க நினைக்கறீங்க...
மரத்துல தொங்குற வௌவால்கிட்ட போய் தலையை மேல வையின்னா சொல்ல முடியும்? அதுக்கு அதுதான் சொகம்...நாம மனுசங்க...தலை மேலதானே இருக்கணும்...?
புரியல...?
கலோரி, கொலஸ்ட்ரால் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து வாகிங் ஜாகிங்னு காமெடி பண்றதுதான்...வௌவால் தனம்...நிமிர்ந்து நில்லுங்க...பாசு...ஊர்க் காட்டுப் பக்கம் வந்து பாருங்க...நாங்கல்லாம் எப்புடீ வாழறோமுன்னு!

நாட்டு சக்கரைக்கான வெளம்பரம்:
'Jaggery better than white sugar'
Doctors say jaggery can be used as a substitute for white sugar, as it contains more iron and minerals. Figs and dates are also considered as healthy substitutes for white sugar. Dietician Mridula Wattas says those who are very particular about using a sugar substitute can opt for stevia, a herb which is easily available in nurseries, or stevia-based sweeteners.

http://in.news.yahoo.com/48/20100115/804/tnl-how-safe-are-sugar-substitutes-exper.html

No comments:

Post a Comment