கமல் அள்ளக்கைகளுக்கு சேரியிலிருந்து ஒரு கடிதம்...
இல்லல்ல லெட்டர்...
வேணாம் கடுதாசின்னே வச்சுக்கலாம்!
எங்க ஊர்ல ராகவன் ராகவன்னு ஒருத்தன் இருந்தான். அவந்தான் எங்க ஊருக்கு கிரிக்கெட்ட அறிமுகப்படுத்துனான். அதாவது, ஒங்க கமலு, மொத மொதன்னு ஈரோயினி வாயில முத்தம் குடுக்கறத அறிமுகப்படுத்துனாரே...அதே மாதிரி...
அட...எருமை மாடே...மகாநதியில ஒரு எடிட்டிங்கை அறிமுகப்படுத்தினாரே ...அதச் சொல்ல வக்கில்ல...?ன்னு கோச்சுக்காதீக அள்ளக் கைகளா...!
எந்தப் புது அறிமுகமும் தொடர்ந்து பயன்படணும்...உங்க ஆளு கொண்டாந்த எடிட்டிங் இப்ப என்னா ஆச்சு...?
மகாநதிக்கு முன்னாலயும் படம் வந்துச்சு...பின்னாலயும் படம் வருது...அந்த எடிட்டிங்க்...? ஒங்காளுக்குத்தான் அதோட தலையெழுத்து என்னான்னு தெரியும்.
அதேமாதிரிதான்...மும்பை எக்ஸ்பிரஸ்ல...டிஜிடல் கேமரா சிஸ்டம் கொண்டாந்தாரு உங்காளு...
தியேட்டர்ல் ஒக்காந்து முறுக்கு தின்னவன் பூரா...’த்தா...என்னாடா...தியேட்டர்லயும் லைய்ட்ட ஆப் பண்ணிட்டீங்க...தெரையிலயும் லைட்ட ஆப் பண்ணிட்டீங்க...?ன்னு கத்துனான். அந்தச் சத்தம் ஒங்காளு காதுல் வுழுந்துருக்காது. அவரு அந்த நேரத்துல...அடுத்த கண்டுபிடிப்புல மூழ்ழ்ழ்ழ்ழ்கி இருந்திருப்பாரு.
ஆனா பாருங்க...இந்த வாயில முத்தம் குடுத்து...ஒதட்ட இழுத்து ஜவ்வு முட்ட்டாய் மாதிரி உடற கலைய உங்காளு கண்டுபுடிச்சி...அது இன்னிக்கு...சிம்பு வரைக்கும் யூஸ் ஆகுது...
உண்மையில...இதாம்பா கண்டுபிடிப்பு...!
சரி...நம்ம ராகவன் இருக்கானே...அவன் அடிக்கடி என்னா சொல்வான் தெரியுமா?
’மொதல்ல கிரிக்கெட்ட கிரிக்கெட்டா ஆடக் கத்துக்கணும் தம்பி...’ –ம்பான்.
அவன் கிரிக்கெட் பொஸ்தவம்லாம் வச்சுப் படிச்சு வெளாடுவான். நான் பிறவியிலயே ப்ளேயரு. எனக்கு பொஸ்தவம் தேவப்படல. ஆனா...நான் பேட்டைச் சுத்தி சுத்தி சிக்சு போரூன்னு அடிச்ச்சா...ராகவன் கடுப்பாவான். ’டேய்...கம்மானாட்டி...இது கிரிக்கெட்டு இல்லடா...என்னமோ டோபி...ஆத்துல துணி வெளுக்கற மாதிரி பேட்ட வீசற...?’ம்பான். கடசியில...நான் கிரிக்கெட்டே வெளாடறதில்லன்னு ஆகிப்போச்சு. ராகவனைப் பத்தி நான் கொறை சொன்னா...அவனோட அள்ளக் கைங்க எம்மேல வுழுந்து பிறாண்டுவாய்ங்க.
‘டேய்...பட்டிக்காட்ட்டுப் பன்னி...ராகவன் அண்ணனைப் பத்தி என்னாடா தெரியும்? அவருதாண்டா...கிரிக்கெட்டு வெளையாட்டுல ஒலக நாயகன்...ப்மாங்க’
நான் சொம்மா இருக்காம, ‘அப்புடீன்னா...இந்த டெண்டுல்கரு...ஸ்டீவ் வாக்லாம்...என்னாடா செவ்வாய் கெரக நாயகனுகளா?’ம்பேன்.
இப்ப..ஒங்க கமலகாசரை நீங்க ஒலக நாயகருங்கறீங்க. ‘இந்த அல் பேசினோ, பிராட் பிட், டி காப்ரியோ, டென்சில் வாக்ஷிங்க்டன், கெவின் காஸ்ட்னர், கெவின் ஸ்பேசி, மெல் ப்ரூக்ஸ், மெல் கிப்சன், டாம் ஹேங்ஸ், வில் ஸ்மித்....இப்புடீ போவுதே லிஸ்ட்டு...இவங்கள்லாம் எந்த கெரக நாயகனுங்க?
லைஃப் ஈஸ் பியீட்டிபுல் படத்துல நடிச்ச ரொபர்டோ பெஞ்சினி...யெல்லாம் எந்த கெரகம்...?
அட...என்னாத்துக்கு அம்புட்டு தூரம்...?
இந்த ஆயிரத்தில் ஒருவன்ல நடிச்ச கார்த்தி...பிதாமகன் சூர்யா....காசி...விக்ரம்...இவங்கள்லாம்...விண்கலத்துல ஏறி அவதார் மாதிரி ஏதாச்சும் ஒரு கெரகத்துக்குப் போயி கூத்தாடிப் பொழைச்சுக்கணுமா...? இவங்களும் நாயகனுங்கதான் அள்ளக் கைககளா...
பட்டம் போட்டுக்கறதுக்கு முன்னால...கொஞ்சம் கூச்சப்படணும்....
எங்க ஊர்ல...வட்டச் செயலாளர் ஒருத்தரு அவரு மவன் (4 வயசு) பொறந்த நாளைக்கு கெடா வெட்டி சோறு போட்டாரு...வெளம்பரத்துல...
’இந்தியாவின் இளைய மகாத்மாவே...’ன்னு ப்ளக்சு அடிச்சாய்ங்க...
வட்டத்துக்குத்தான் 40 வயசு ஆச்சேன்னு இளைய மகாத்மாவா அவரு?ன்னு விசாரிச்சா...அது அவரு மவனுக்குக் கொடுத்த பட்டமாம்.
இதுக்கும்...ஒங்காளோட ஒலக நாயகன் பட்டத்துக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்க பார்க்கலாம். சொம்மா உதார் வுட்டுக்கிட்டுத் திரியறதே பொழைப்பாப் போச்சி.
தமிழ் சினிமா...எங்கயோ போயிடுச்சி...அள்ளக் கைகளா...
அழகி, கற்றது தமிழ், அங்காடித் தெரு, வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, 23ஆம் புலிகேசி, பேராண்மை...ன்னு எங்காளுக...பின்னிப் பெடல் எடுத்துக்கிட்டிருக்காய்ங்க.
ஒங்காளு...புது மேக்கப் மேன் தேடி அலையறாரு.
ஒங்காளு மனசு பூரா...சாதி ஆதிக்கமும்...பெண்கள் மேல வக்கிரமும்தான் கொட்டிக்கெடக்கு. இது ஊரறிஞ்ச சேதிதானே... இதச் சொன்னா ஒங்களுக்குக் கோவம்கூட வருமா...? பார்றா...!
ஒங்க கமலகாசரும் எங்க கிரிக்கெட்டு ராகவன் மாதிரித்தான்னு எனக்கு அடிக்கடித் தோணும்...ஏன்னா...’சினிமாவ சினிமாவா பாருங்க’-ன்னு அடிக்கடி அட்வைஸ் பன்றாரு. அவரு கூட தேவலாம். அவரோட அள்ளக் கைகளான ஒங்க இம்சை தாங்க முடியலடா சாமீ.
’காட்சி’ன்னு ஒரு வலைத்தளம், அதுல கற்றது தமிழ் இயக்குனர் ராம் நிறைய எழுதறாரு. அவரோட உதவி இயக்குனர் மாரிச் செல்வம்னு ஒரு பயபுள்ள, கமலகாசரைப் பத்தி கொஞ்சூண்டு உண்மைகளை எழுதிடுச்சு.( http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_21.html) கொளம்பிட்டாய்ங்கய்யா...கமலு அள்ளக்கைககள் எல்லாம். ‘ஏய்...நீ. என்னா இவனா? அவனா...?ன்னு’
கமல் படத்துல சாதி ஆதிக்கப் புத்தி இருக்கு’ன்னு மாரிச் செல்வம் சொல்றாப்ல. இதச் சொல்ல மாரிச் செல்வம்தான் வரணுமா? உலகத்துக்கே தெரியும். ஆனா...நாம யாரு?
அண்ணாந்து பார்த்தா மேகம் தெரியும். ஆனாலும், சன் டிவியில...மோனிகா பாப்பாவும், வானிலை ஆய்வு ரமணனும் ’மழை வந்தாலும் வரலாம்...வரலைன்னாலும் போகலாம்’னு சொன்னாத்தானே தெளிவடைவோம்.
அப்புடி, ஒரு பெரச்சனைதான் இது.
’போற்றிப் பாடடி பெண்ணே...தேவர் காலடி மண்ணே’...ன்னு பாட்டப் போட்ட கமலுக்கு சாதி வெறி இல்லையாம்.ஆனா... ’ஏண்டா இப்புடி ஒரு சாதிய தூக்கி வச்சுப் பாட்டுப் போடறன்னு’ கேக்கற மாரிச் செல்வத்துக்கு சாதி வெறி இருக்காம். என்னா கண்டுபிடிப்பு!
இந்தப் பாட்ட...ஒரு அக்கிரகாரத்துல ஸ்பீக்கர்ல போட்டு வுட்டா...அங்க வாழறவாளுக்கெல்லாம்...கொஞ்சம் கூட கோவம் வராதா...? அதுவும் காலையிலருந்து ராத்திரி வரைக்கும்...தெனமும் போட்டுக்கிட்டே இருந்தா...? எல்லா பிராமணாளும் ’எங்கே தேவர் காலு எங்கே தேவர் காலுன்னு ஓடீ போயி...உழுந்து கும்பிடுவாளோ...என்னமோ!’
அந்த மாதிரித்தானய்யா...இன்னிக்கு வரைக்கும் அந்தப் பாட்டையும்...’சண்டியரே...சண்டியரே’பாட்டையும் ஆதிக்கச் சாதிக்காரனுங்க பள்ளர் பறையர் தெருக்கள்ல போட்டுப் போட்டு வெறுப்பேத்தறானுங்க...!
இமானுவேல் சேகர்னு ஒரு பள்ளர் சாதித் தலைவர், முத்துராமலிங்கத் தேவர் முன்னால கால் மேல கால் போட்டு ஒக்காந்ததுக்காக, தேவரோட ஆளுங்க அந்தத் தலைவரைக் கொலையே பண்ணின மண்ணு அது.
அதுக்கப்புறம் டாக்டர் கிருக்ஷ்ணசாமி மாதிரி வெகு பேரு, போராடி...பள்ளருங்களுக்கும் மத்த ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் மானம் மருவாதியக் காப்பாத்திக் கொடுத்துருக்காவ. அந்த மண்ணுல கமலு படம் எடுக்க ஆயிரம் கத இருக்கு. ஆனா...அவருக்கு, ‘தேவர் காலடி மண்ணை...போற்றிப் பாடற கதைகள் மட்டும்தான் புடிக்கும்’
கால்மேல கால் போட்டதுக்கே தலைய வாங்கற சாதியோட பெருமைய ‘போற்றிப் பாடணுமா?’ ன்னு மாரிச் செல்வம் கேக்கறாப்ல. ஆமா...இல்லன்னு பதில் சொல்லிட்டுப் போகாம..
’ஒனக்கு சினிமா தெரியுமா? சினிமா பார்க்கத் தெரியுமா? கமல் சாரைப் பார்த்தே...இப்புடிப் பேசுவியா...? அவரு எம்மாம் பெரிய பருப்புத் தெரியுமா...?’ன்னு அள்ளக் கைகள் எகிறிக் குதிக்குது அந்த வலைத்தளத்துல.
’பார்ப்பானையும் பாம்பையும் கண்டா பார்ப்பான மொதல்ல அடி’ன்னு சொன்ன பெரியாரோட புகழ் பரப்பற பாட்டுகளை நாங்க சிடி போட்டுத் தர்றோம். கமலும் அவரோட அள்ளக் கைகளும் அக்கிரகாரம் அக்கிரகாரமா போய் போடட்டும். என்னா...டீலிங்க் எப்புடி இருக்கு?
சில மேதாவிக...’சினிமாவ சினிமாவா பாருங்க’ன்னு ,மெசேஜ் குடுக்குது. ’ஏண்டா சினிமாவை என்ன சீட்ட்டாட்டமாவாடா பார்ப்பாங்க?
இவனுங்களோட நியாயத்தப் பாருங்க.
1. குருதிப் புனல் - தீவிரவாதத்தை விமர்சிக்கும் படம்
2. ஆளவந்தான் – மனச் சிதைவு / குடும்பச் சிதைவை விவரிக்கும் படம்
3. விருமாண்டி – மரண தண்டனைக்கு எதிரான படம்
4. அன்பே சிவம் – கம்யூனிசப் படம்
5. தசாவதாரம் – கேயாஸ் தியரியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்
6. உன்னைப் போல் ஒருவன் – இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிரான படம்
தேவர் மகன் - ?
’அட அது ஒரு படம் சார். அவ்வளவுதான். அதுக்கு நீங்க ஏன் கலர் கொடுக்கறீங்க?’
அடங்கொய்யால...மத்த...சினிமாவுக்குள்ள தத்துவம் இருக்கு. தேவர் மகன்ல மட்டும் சினிமா மட்டும்தான் இருக்கா...? அந்தப் படத்துல சாதி இல்லையா?
அந்தப் படத்துல வர்ற சிவாஜியும்...கமலும் எப்படிக் காட்டப்பட்டாங்களோ...அது சாதி ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிற மாதிரி கொஞ்சம் கூடத் தெரியலையா...?
அது ஒண்ணுமில்ல அள்ளக் கைகளா... நீங்கள்லாம்...பாதுகாப்பா வாழறீங்க...ஒங்க சாதி என்னன்னு எவனுக்கும் தெரியாத மாதிரி வேசம் கட்டி அலையறீங்க... ஒங்க அப்பனை எவனும் ‘டேய்...தேவடியா மவனே...வந்து மாட்ட அவுத்து வுடுடா...’ன்னு திட்டறதில்லை.
அதனால...மாரிச் செல்வத்தோட அழுகை உங்க கண்ணுக்குத் தெரியாதுதான்.
உங்க கண்ணுக்கு நல்லாத் தெரிஞ்ச ஒண்ணு என்ன தெரியுமா...?
ஒங்க தலைவர் மவளுவளோட தொப்புளும் தொடையும் தான்...
நல்லா பாருங்க....
அதுங்கதான் இப்ப இந்தியா லெவல்ல பேமஸூ....
சினிமாவ சினிமாவா பாருங்க...
தொப்புள தொப்புளா பாருங்க
தொடய தொடையா பாருங்க...
ஐயோ...நம்ம கலைஞானி கமலோட பொண்ணுங்க தொப்புளாச்சே...அப்புடீன்னு கண்ண மூடிக்கவா போறீங்க?
ஆனா...நாங்க மூடிக்குவோம் ...அந்தக் கருமத்தப் பார்க்க மாட்டோம்...
ஏன்னா... எங்களுக்கு சாதிக் கொடுமையோட வேதனையும் தெரியும்...
ஆணாதிக்க வக்கிரத்தோட கொடுமையும் தெரியும்.
ரவிக்கை போட்டுக்கிட்டு வீட்ட விட்டு வெளில போறதுக்கே எங்க தாத்தன் பாட்டி காலத்துல போராட்ட்டம் நடத்த வேண்டி இருந்துச்சி....
எங்க பரம்பரையில...தொப்புளு தொட...இதெல்லாம்...ஆதிக்கச் சாதிக்காரனுக வெறிக்கு பலியாகி...பலியாகி...அந்த உறுப்புகளைப் பார்த்தா...காமம் கண்றாவியெல்லாம் வராது...
வயக்காட்டுல நாத்து நடறப்போ...சர்வசாதாரணமா பொடவைய தூக்கிக் கட்டிக்கிட்டுத்தான் எங்க அக்கா தங்கச்சி அம்மா அப்பத்தா எல்லாம் வேலை பார்க்கிறாக... எவனும் உத்துப் பாக்கறதில்ல...
உரிச்சுப் போட்ட கோழி மாதிரி பொண்ணுகளைத் தொங்க வுட்டு...தானும் சட்டை, பேண்டைக் கழட்டி...வெறும் டவுசரோட ஆட்டம் போடற...கமலகாசருக்கும் அவரோட அள்ளக் கைகளான...(அதாவது அவரோட ’கலை’ நிபுணத்துவத்தை போற்றிப் புகழ்கிற) ஒங்களுக்கும் பொம்பளைன்னா...
அதுவும் தொடையையும் தொப்புளையும் காட்டினா...’அத்தினி சித்தினி பத்தினி’ன்னு மூடு வந்துடும்.
இதே மூடுதானே...ஒங்க ஒலக நாயகரு மவளுகளைப் பார்க்கறப்பவும் வரும்?
அவருக்கு இது தெரியாதா என்னா...? (அதுவும் பொம்பளைங்க டிரஸ்ஸ அவுக்கறதுல....அவருக்குத் தெரியாதது ஏதாச்சும் இருக்குமா...?)
காசுக்காக...இதுவும் செய்வாரு...இன்னுமும் செய்வாரு...
வேணும்னா...ஒங்க மொழியில கலைக்காக இதுவும் செய்வாரு...இன்னுமும் செய்வாருன்னு....
திருத்திப் படிச்சுக்கோங்க...!
அதனால,
ஒங்களைக் கேட்டுக்கறது என்னான்னா...
ஒங்க ஒலக நாயகர் ஆச்சி...அவர் கலைக் குடும்பம் ஆச்ச்சி...ஒங்களோட கலைச் சேவைகள் ஆச்சி!
அத்தோட நிறுத்திக்கங்க...!
நாங்க...பொலம்பறது...எங்க ஊட்டுல ஒலக நாயகனால வுழுந்த எழவுக்கான ஒப்பாரி...!
அதையும் தடுக்க தாண்டிக்குதிக்காதீங்க...!
உங்க ஆளு ப்ளே பாய் வேசம்லாம் கட்டி...ஹீரோயின்களை உருட்டி விளையாண்டப்ப...ஆதிக்கச் சாதிக்காரனுங்ககிட்ட எங்க வூட்டுப்பொண்ணுங்களை பலி கொடுத்து...அதுகளுக்கு கருமாதி செய்யக் கூட வக்கில்லாம அழுது நின்னவங்க நாங்க.
புரியல...?
கொடியன்குளத்துல என்னா நடந்துச்சுன்னு கமலகாசருக்கிட்ட கேளுங்க...!
ஒங்களுக்கு தில் இருந்தா...கொடியன் குளத்தப் பத்தி ஒரு படம் எடுக்கச் சொல்லுங்க...ஒங்க ஒலக நாயகர...!
Tuesday, April 6, 2010
Subscribe to:
Posts (Atom)